குஜராத்தின் வதோதராவில், இறுதி ஊர்வலம் நடத்திக் கொண்டிருந்தபோது, சோலங்கி (30) என்ற நபர் வெளியில் இருந்து ஓடி வந்து தீயில் குதித்து உயிரிழந்துள்ளார்.
குஜராத்தின் வதோதராவில், புறநகர் பகுதியில் உள்ள தஷ்ரத் கிராமத்தில் உள்ளூர் கிராம மக்கள் சுடுகாட்டில் உள்ளூர்வாசி ஒருவரின் இறுதி ஊர்வலம் நடத்திக் கொண்டிருந்தபோது, சோலங்கி (30) என்ற நபர் வெளியில் இருந்து ஓடி வந்து தீயில் குதித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் பலர் ஓடி வந்தனர்.
சம்பவம் பற்றி அறிந்ததும், பாதிக்கப்பட்டவரின் தாயும் சம்பவ இடத்திற்கு வந்தார். ஆனால் அவரது உடலை தீயிலிருந்து வெளியே எடுத்த நேரத்தில், அவரது உடல் ஏற்கனவே பாதி எரிந்த நிலையில், அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவர் விரலில் அணிந்திருந்த மோதிரத்தின் மூலம் அவரது தாயார் அவரது உடலை அடையாளம் காட்டினார். பலத்த காயமடைந்த சோலாங்கியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், சோலங்கிக்கு நீண்டகாலமாக மனநலம் பாதிக்கப்பட்டதால், அவரது தாயார் சோலங்கியை கவனித்து வருவதாக உள்ளூர்வாசிகள் போலீசாருக்கு தெரிவித்தனர்.
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நாயகன் ராம்சரண், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ட்ரெய்லர், நாளை…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல…
உடுமல்பேட்டை : பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி,…
மதுரை : தமிழக அரசு, இந்த முறை பொங்கல் சிறப்பு பரிசாக ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி,…
சென்னை : இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் பேமெண்ட் வசதிகளை…
சென்னை :வெண்டைக்காய் கிரேவி வித்தியாசமான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருள்கள்; வெண்டைக்காய் -300 கிராம் மிளகாய்…