கடந்த 2014ஆம் ஆண்டு தனது முன்னாள் காதலியின் கையை பிடித்து இழுத்த குற்றத்திற்காக, அந்த நபருக்கு ஒரு ஆண்டு சிறை தணடனை வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு தனது முன்னாள் காதலியை தாக்கிய குற்றத்திற்காகவும், பொது இடத்தில் அவரது கையை பிடித்து இழுத்து அவளது கண்ணியத்தை சீர்குலைத்ததாகவும் எழுந்த புகாரில், மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அந்த நபருக்கு ஓராண்டு சிறை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து நீதிபதி, காதல் விவகாரமாக இருந்தாலும் அந்த நபர் அவ்வாறு நடந்து கொள்வதற்கு அவருக்கு உரிமை இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பிலிருந்து கூறுகையில் பெரிய தவறு செய்ததாக நீதிமன்றம் கூறியிருந்தாலும் சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகள் ஆன நிலையில் கால அவகாசத்தை கருத்தில் கொண்டு கடுமையான தண்டனை வழங்குவது நியாயமில்லை என்று வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட நிலையில், அவருக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை இருப்பதாக கூறி மன்னிப்பு கோரியுள்ளார்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…