அசாம் வெள்ளத்தில் பைக் உடன் ஆற்றில் அடித்த சென்ற நபர்..வைரல் வீடியோ உள்ளே.!
அசாமில் பெய்து வரும் மழையால் சாலையில் ஓடும் நீரில் இருசக்கர வாகனத்துடன் சென்ற நபர் தவறி விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
அசாம் மாநிலத்தில் கடந்த வாரத்திலிருந்து பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா போன்ற 13 ஆறுகள் மற்றும் அதன் துணை ஆறுகளில் தற்பொழுது வெள்ளம் ஏற்பபட்டுள்ளது இதானால் 24 மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலயில், 3 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளத்தால் 48 ஆயிரம் பேர் வீடு இழந்து தவித்து வருகின்றனர், வெள்ளத்தால் விளைநிலங்கள், மற்றும் சாலைகள், வீடுகள் அனைத்தும் பயங்கரமாக சேதமடைந்துள்ளது, இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை 649 முகாமில் தங்கவைத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.மேலும் மொத்தமாக வெள்ளத்தில் 27 லட்சம் விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மழையால் 24 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் சாலைகள் உடைந்தும் காணப்படுகின்றன. இந்த நிலையில் வெள்ள நீரில் ஒருவர் தனது பைக்குடன் உடைந்த சாலையை மரப்பாலத்தின் வழியே கடக்கும் போது தடுமாறி நீரில் விழுகிறார். அப்போது நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் தவறி விழுந்தவரும், அவரது பைக்கும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
இதனை கண்ட பலர் அருணாச்சல பிரதேசத்தில் நடந்த நிகழ்வு என்று கூறப்பட்டு வந்த நிலையில், வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பத்திரிக்கையாளர், இந்த நிகழ்வு அசாமில் நடந்தது என்றும், தவறி விழுந்தவர் பத்திரமாக மீட்கப்பட்டார் என்றும் கூறியுள்ளார்.
Okay Arunachal police has pointed out that the language spoken is Assamese. So most probably the video is from Assam. @gpsinghassam @HardiSpeaks can you please verify? Keen to know if the biker was rescued https://t.co/bluZXCRsfP
— Arunima (@Arunima24) July 20, 2020