கன்வர்லால் என்பவர், தடுப்பூசிக்கு பயந்து ஆதார் அட்டையுடன் மரத்தின் மேல் ஏறியுள்ளார்.
மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தின் படங்கலன் கிராமத்தில், கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதற்காக சுகாதாரத்துறை அந்த கிராமத்திற்கு சென்று உள்ளது. இதனையடுத்து கிராம மக்கள் அனைவரும் தடுப்பூசி மையத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டனர். அந்த கிராமத்தில் வசிக்கும் கன்வர்லால் என்பவர் தடுப்பூசி முகாமிற்கு சென்றுள்ளார்.
ஆனால் தடுப்பூசி வழங்கப்படுவதை கண்ட தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுத்துவிட்டார். மேலும் அவருக்கு தடுப்பூசி செலுத்த பயம் என்பதால், தடுப்பூசி மையத்திற்கு அருகில் உள்ள மரத்தில் ஏறி தடுப்பூசி முகாம் முடியும் வரை அங்கேயே இருந்துள்ளார். அவரது மனைவி தடுப்புசி எடுத்த ஒப்புக்கொண்ட போதிலும், அவர் தன்னுடைய ஆதரட்டையை மட்டுமல்லாது, தனது மனைவியின் ஆதார் அட்டையையும் எடுத்துச் சென்றுள்ளார்.
இதனையடுத்து இந்த சம்பவம் கேள்விப்பட்ட பின், குஜ்னர் தடுப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜீவ் கிராமத்திற்கு சென்று அவருடன் பேசி அவருக்கான ஆலோசனை வழங்கினார். மேலும் இதுகுறித்து டாக்டர் ராஜீவ் கூறுகையில், ஆலோசனைக்குப் பின் அவருடைய தடுப்பூசி குறித்த பயம் நீங்கி விட்டது. அடுத்த முறை அவர்களது கிராமத்தில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் போது, கன்வர்லால் மற்றும் அவரது மனைவி தடுப்பூசி போடுவார்கள் என தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…