மத்தியப் பிரதேசம் : மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள தாண்டா பகுதியில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட அதிர்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதிலும், கொடுமையான விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவருக்கு உதவ முயற்சி செய்வதற்கு பதிலாக தாக்குதலை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தார்கள்.
அடையாளம் தெரியாத பெண் ஒருவரை முகத்தை முடி வைத்துவிட்டு ஒரு சிலர் கையை பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது ஒருவர் கையில் வைத்து இருந்த கட்டையை வைத்து அந்த பெண்ணை தாக்கினார். வலியை தாங்கமுடியாமல் துடித்த அந்த பெண் நெளிந்துகொண்டு இருந்தார். இருந்தாலும், அந்த நபர் தொடர்ச்சியாக பெண்ணை தாக்கி கொண்டு இருந்தார்.
இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வந்த நிலையில், இதுகுறித்து தார் போலீசார் உடனடியாக விசாரணை நடத்தினர். விசாரணையில், பெண்ணை தாக்கிய அந்த நபர் கைது செய்யப்பட்டார் எனவும் தார் காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் குமார் சிங் தகவலை தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து பேசிய அவர் ” முக்கிய குற்றவாளி கோக்ரி தானா கந்த்வானியில் வசிக்கும் நிர்சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் வீடியோவில் காணப்படும் மற்ற நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த வன்முறைச் செயல் கண்டிக்கத்தக்கது, மேலும் பாதிக்கப்பட்டவருக்கு நீதியை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை: மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : சந்தானம் ஒரு காலத்தில் தொடர்ச்சியாக காமெடியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து மட்டுமே திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில், திடீரென்று…
பாகிஸ்தான் : 2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. எனவே, எந்த நாட்டில்…
மும்பை : சைஃப் அலிகான் நேற்று லீலாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சைஃப் தற்போது நலமாக உள்ளார். கடந்த…
சென்னை: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று (ஜன.22ம் தேதி)…
போலு : துருக்கி ஹோட்டலில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76ஆக அதிகரித்துள்ளது. இஸ்தான்புல்லுக்கு கிழக்கே சுமார்…