அதிர்ச்சி! நடுரோட்டில் பெண்ணை தாக்கிய நபர்…தடுக்காமல் வீடியோ எடுத்த மக்கள்!

women beaten with a stick

மத்தியப் பிரதேசம் : மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள தாண்டா பகுதியில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட அதிர்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதிலும், கொடுமையான விஷயம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவருக்கு உதவ முயற்சி செய்வதற்கு பதிலாக தாக்குதலை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துக்கொண்டு இருந்தார்கள்.

அடையாளம் தெரியாத பெண் ஒருவரை முகத்தை முடி வைத்துவிட்டு ஒரு சிலர் கையை பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது ஒருவர் கையில் வைத்து இருந்த கட்டையை வைத்து அந்த பெண்ணை தாக்கினார். வலியை தாங்கமுடியாமல் துடித்த அந்த பெண் நெளிந்துகொண்டு இருந்தார். இருந்தாலும், அந்த நபர் தொடர்ச்சியாக பெண்ணை தாக்கி கொண்டு இருந்தார்.

இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வந்த நிலையில், இதுகுறித்து தார் போலீசார் உடனடியாக விசாரணை நடத்தினர். விசாரணையில், பெண்ணை தாக்கிய அந்த நபர் கைது செய்யப்பட்டார் எனவும் தார்  காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ் குமார் சிங் தகவலை தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய அவர் ” முக்கிய குற்றவாளி கோக்ரி தானா கந்த்வானியில் வசிக்கும் நிர்சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் வீடியோவில் காணப்படும் மற்ற நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்த வன்முறைச் செயல் கண்டிக்கத்தக்கது, மேலும் பாதிக்கப்பட்டவருக்கு நீதியை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்