கடை உரிமையாளரின் அனுமதியின் சமோசாவை எடுத்து சாப்பிட்ட நபர் உயிரிழப்பு..! பின்னணி என்ன..?
மத்திய பிரதேச மாநிலத்தில் கடை உரிமையாளரின் அனுமதியின்றி சமோசாவை எடுத்து சாப்பிட்ட நபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சோலா பகுதியில் உள்ள சங்கர் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குடிபோதையில் கடைக்குள் நுழைந்து உரிமையாளரின் அனுமதியின்றி சமோசா எடுத்து சாப்பிட்டுள்ளார். இதனால் கடை உரிமையாளர் தாக்கிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக சோலா மந்திர் காவல் நிலையப் பொறுப்பாளர் அணில் சிங் மவுரியா கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை மாலை தலைநகர் சோலா பகுதியில் உள்ள சங்கர் நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. உயிரிழந்த நபர் வினோத் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
வினோத் குடிபோதையில் கடைக்குள் நுழைந்து சமோசாவை எடுத்து சாப்பிட ஆரம்பித்துள்ளார். இதனையடுத்து உரிமையாளர் அவரை திட்டியுள்ளார். பின்னர் ஒரு குச்சியால் தலையில் அடித்துள்ளார். இதனையடுத்து அவர் இறந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் மற்றும் அவரது 20 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.