காங்கிரஸ் அரசுக்கு விடைகொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர்.! அமித்ஷா பேட்டி.!

Rajastan CM Ashok Gehlot - Union Minister Amit shah

இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி இம்மாதம் 5 மாநில தேர்தல் நடைபெபெற்று வருகிறது. ஏற்கனவே மிசோராம், சத்தீஸ்கர், மத்திய பிரதேச தேர்தல்கள் நடைபெற்று முடிந்தன. நாளை மறுநாள் (நவம்பர் 25)இல் ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

நாளை மறுநாள் தேர்தல் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவுற உள்ளது. அதனால் பிரதான கட்சி தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சார வேலைகளை மேற்கொண்டு வருகிண்றனர்.

இந்த ‘பாரத மாதா’ யார்? நாட்டின் செல்வம் யார் கைக்கு செல்கிறது.. தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் பேச்சு!

பாஜகவுக்கு ஆதரவாக நேற்று வரை பிரதமர் மோடி ராஜஸ்தான் மாநிலத்தில் பில்வாரா, துர்காபூர் பகுதியில் தீவிர தேர்தல் பிரசாரம் செய்துவந்தார். அதே போல, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் தோல்பூர், பரக்பூர் மாவட்டங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இன்று தேர்தல் பிரச்சார கடைசி நாளில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ராஜஸ்தான் மாநில ஆளும் காங்கிரஸ் கட்சியை பற்றி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஊழலை “ரெட் டைரி”  வெளிப்படுத்திவிட்டது. அமைச்சகத்தின் இருப்பிடத்தில் ரூ.2.35 கோடி ரொக்க பணமும் மற்றும் 1 கிலோ தங்கமும் சிக்கியது. இந்திய வரலாற்றில் இதுபோல நடந்ததில்லை.

கடந்த 6 மாதங்களில், நான் ராஜஸ்தானில் பல்வேறு இடங்களுக்கு சென்றேன். கிட்டத்தட்ட முழு ராஜஸ்தானுக்கும் நான் சென்றுவிட்டேன். ராஜஸ்தானில் அடுத்த ஆட்சி பாஜக தான் அமைக்கப்போகிறது என்பதை நம்பிக்கையுடன் கூற முடியும். ராஜஸ்தானின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள மக்களிடையே மாற்றத்தின் மனநிலை உருவாகி உள்ளது. ஒவ்வொரு துறையிலும் தோல்வியடைந்து வரும் காங்கிரஸ் அரசுக்கு விடைகொடுக்க ராஜஸ்தான் மக்கள் தயாராகிவிட்டனர் என செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அசோக் கெலாட் முதல்வராக உள்ளார். பாஜக இங்கு எதிர்க்கட்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் உட்பட மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா என 5 மாநில தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்