அறுவை சிகிச்சையின் போது பிக்பாஸ் ஷோவையும் ,அவதார் படத்தையும் கண்டு ரசித்த நோயாளி.!
33 வயதான நோயாளி தனது அறுவை சிகிச்சையின் போது கண் விழித்திருக்க வேண்டும் என்பதால் அவர் பிக்பாஸ் ஷோவையும், அவதார் படத்தையும் கண்டு ரசித்தார் .
அறுவை சிகிச்சையின் போது பிக்பாஸ் ஷோவையும் ,அவதார் படத்தையும் பார்த்து ரசித்த நோயாளி . இந்த சம்பவம் ஆந்திராவின் குண்டூரில் நிகழ்ந்துள்ளது.33 வயதான வர பிரசாத் என்பவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அதனை குண்டூரின் பிருந்தா நியூரோ மையத்தில் வைத்து வர பிரசாத் செய்துள்ளார் .
இந்த அறுவை சிகிச்சையின் போது நோயாளி விழித்திருக்க வேண்டுமாம் .எனவே வர பிரசாத் அறுவை சிகிச்சை செய்யும் போது பிக்பாஸ் ஷோவையும், ஹாலிவுட் படமான அவதார் படத்தையும் பார்த்து ரசித்துள்ளார் . ஏற்கனவே வரப் பிரசாத் கடந்த 2016-ம் ஆண்டு கட்டியை அகற்ற ஹைதராபாத்தில் அறுவை சிகிச்சை செய்தார்.ஆனால் அது முழுமையாக குணமடையவில்லை என்பதால் தற்போது மீண்டும் செய்துள்ளார் . அதன் பின் நோயாளி குணமடைந்த பின்னர் சனிக்கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.