பாஜகவில் ‘நோ’.! காங்கிரஸில் ஓகே.! ஜெகதீஷ் ஷெட்டருக்கு தொகுதி ஒதுக்கிய கட்சி தலைமை.!
பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஹூப்ளி தொகுதியை ஒதுக்கியது கட்சி தலைமை.
கர்நாடகா சட்டசபை தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி கொண்டே செல்கிறது திரைப்படங்களில் கூட இல்லாத அளவுக்கு பல திருப்பங்களை தினம் தினம் சந்தித்து வருகிறது . தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் பிரதான கட்சி முக்கிய தலைவர்கள் கூட பிற கட்சிக்கு தாவி வருகின்றனர். அவர்களுக்கும் அந்த கட்சி சீட் வழங்கி வருகிறது.
அப்படி தான் பாஜகவை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வராக இருந்த ஜெகதீஸ் ஷெட்டருக்கு கட்சி தலைமை சீட் வழங்க மறுத்துவிட்டது. 6 முறை எம்எல்ஏ, மாநில தலைமை, முன்னாள் முதல்வர் தகுதி என இவ்வளவு இருந்தும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.
ஷெட்டர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிறகு, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே.செல்வக்குமார் கூறுகையில், காங்கிரஸ் கட்சியில் ஒரு உறுப்பினராக மட்டுமே ஜெகதீஸ் ஷெட்டர் செயல்படுவார் என கூறினார். அவருக்கு தற்போது, காங்கிரஸ் கட்சி ஹூப்ளி சட்டமன்ற தொகுதியை ஒதுக்கியுள்ளது. அவரை எதிர்த்து பாஜக சார்பில் மகேஷ் தென்கினகாய் போட்டியிட உள்ளார்.