கடந்த மாதம் 21-ம் தேதி மஹாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவைபட்டது . கூட்டணி கட்சிகளான பாஜக , சிவசேனா 161 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்த இரண்டு கூட்டணி கட்சிகளுக்கு இடையே அதிகார பகிர்வில் மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து எந்த கட்சியும் ஆட்சி அமைக்க பெருபான்மை இல்லாததால் எந்த கட்சியும் முடியாமல் போனது. பின்னர் மஹாராஷ்டிராவில் கடந்த 12-ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் பாஜக உடனான கூட்டணியை சிவசேனா முறித்து கொண்டு சிவசேனா தனது தலைமையில் புதிய ஆட்சி அமைக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரசு உடன் பேச்சு வார்த்தை நடத்தியது.
நேற்று மாலை மும்பையில் உள்ள நேரு அரங்கத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசு மற்றும் சிவசேனா தலைவர்களும் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் , சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய அரசு அமைக்க மூன்று கட்சிகளுக்கும் ஒருமித்த கருத்து ஏற்பட்டு உள்ளது என கூறினார்.
இந்நிலையில் இன்று காலை மஹாராஷ்டிராவில் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டது. முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக அஜித் பவார் இன்று காலை மஹாராஷ்டிரா ஆளுநர் முன் பதவியேற்று கொண்டனர்.இதற்கு தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் “இது எங்கள் கட்சியின் முடிவல்ல. இதற்கு சரத் பவாரின் ஆதரவு இல்லை ” என கூறினார்.
இந்நிலையில், சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் , கட்சியும், குடும்பமும் பிளவுபட்டு விட்டது என பதிவிட்டு உள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…