இன்று தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!

Published by
Edison

டெல்லி:2022-23 நிதி ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது.

2022-23 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.அதன்படி,நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி இன்று (ஜன. 31) தொடங்கி பிப். 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அந்த  வகையில்,தொடக்க நாளான இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.அவரின் உரையில்,கடந்த ஆண்டில் மத்திய அரசு செயல்படுத்திய சாதனைகள் அனைத்தும் இடம்பெறும்.மேலும்,வருகின்ற நிதி ஆண்டில் மத்திய அரசு செயல்படுத்தவுள்ள உத்தேசித்துள்ள திட்டங்கள் குறித்த விவரங்களும் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார்.இதனையடுத்து,நாளை (பிப்ரவரி 1 ஆம் தேதி) காலை 11 மணிக்கு 2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான (காகிதம் இல்லாத வகையில் டிஜிட்டல் முறையில்)பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.அதன்பின்னர்,பிப். 2 ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும்.

இதற்கிடையில்,இன்று (ஜனவரி 31) மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் உடனடிக் கேள்வி நேரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால்,உடனடிக் கேள்வி நேரத்தில் எழுப்பும் விவகாரங்கள் தொடர்பாக பிப்.2 ஆம் தேதி முதல் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,இரண்டாம் கட்டட கூட்டத்தொடர் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரையும் நடைபெறவுள்ளது.பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதியில் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் பிரதமரின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதனிடையே,பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளதால்,இது குறித்தும் மற்றும் விவசாய நெருக்கடிகள்,கொரோனா 3 வது அலை,சீன ஊடுருவல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,நாடாளுமன்ற கூட்டத்தொடரானது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

தம்பி விஜயுடன் ஏன் சண்டை போடுகிறோம்.? சீமான் கொடுத்த விளக்கம்!

தம்பி விஜயுடன் ஏன் சண்டை போடுகிறோம்.? சீமான் கொடுத்த விளக்கம்!

சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…

23 minutes ago

திருப்பதி மரணங்கள்: ‘கைது நடவடிக்கை வேண்டும்’… பவன், சந்திரபாபு நாயுடுவுக்கு ரோஜா சரமாரி கேள்வி.!

ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…

28 minutes ago

திருவாதிரை ஸ்பெஷல் ஏழு காய் கூட்டு செய்வது எப்படி.?

சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…

34 minutes ago

HMPV வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் என்ன?

HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…

44 minutes ago

பொங்கல் தொகுப்பு பெறுபவர்களே… நாளை ரேஷன் கடைகள் செயல்படும்!

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…

55 minutes ago

நாளை தொடங்கவிருக்கும் கார் ரேஸ்… சீறி பாய தயாராகும் அஜித் குமார்!

துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில்,…

56 minutes ago