ஒரு மாத பெண் குழந்தைக்கு ‘பிபார்ஜாய்’ என பெயர் வைத்த பெற்றோர்.!
இந்தியாவில் இயற்கை பேரிடர்களின்போது பிறக்கும் குழந்தைகளுக்கு தனித்துவமாக பெயர் வைப்பது வழக்கம். இந்நிலையில், பைபர்ஜாய் புயலால் குஜராத் மாநில கடற்கரையோரப் பகுதி மக்கள், அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு குஜராத்தை சேர்ந்த பெற்றோர் தங்களின் ஒரு மாத பெண் குழந்தைக்கு பைபர்ஜாய் என பெயர் வைத்துள்ளனர். இது இந்த முகாம்களில் தங்கியுள்ள அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதற்கு முன்னதாக, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் பிறந்த குழந்தைக்கு கொரோனா பேரிடர் காலத்தில் ‘கொரோனா’ என்று பெயரிடப்பட்டது. மேலும், ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு கொரோனா என்று பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமில்லமால் ராஜஸ்தானை சேர்ந்த தம்பதியினர் தங்களின் ஆண் குழந்தைக்கு ‘லாக்டவுன்’ என பெயரிட்டுள்ளனர். அதுபோல், புயல் பெயர்களையும் வைத்து குழந்தைகளுக்கு திட்லி, ஃபானி, குலாம் என்றும் பெயரிட்டனர். அந்த வரிசையில் தற்போது பிபர்ஜாய் பெயரும் சேர்ந்துள்ளது.