யூனியன் பிரதேசமான காஷ்மீருக்குள் அதிக எண்ணிக்கையிலான தீவிரவாதிகளை நுழைக்க பாகிஸ்தான் ராணுவம் சதித்திட்டத்தை தீட்டி வைத்துள்ளதாக உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து உளவுத்துறை தெரிவித்துள்ள தகவலின் படி கரேன் பிரிவுக்கு எதிரே இருக்கும் ஆத்முகாம், துத்னியல் மற்றும் தஹந்தபானி ஆகிய பகுதிகளில் இருக்கும் ஏவுதளங்களில் 80 தீவிரவாத குழுக்கள் தென்படுகிறது.
இது பாகிஸ்தான் ராணுவம் கட்டுப்பாட்டு பகுதிக்கு மிக அருகில் உள்ளது.இதிலிருந்து சதி செயலுக்கு திட்டமிட்டுவதை தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் ஜெய்ஷ்-இ-முகமது,லஷ்கர்-இ-தொய்பாவை போன்ற தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் அடங்கிய குழுவானது நீலம் பள்ளத்தாக்கு பக்கத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
இக்குழு எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்குள் ஊடுருவ காத்து கொண்டு இருக்கிறது. பாகிஸ்தான் கிராம பகுதியான சுஜியனில் சுமார் 40 தீவிரவாதிகள் முகாமிட்டு உள்ளதாக பாதுக்காப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் தீவிரவாதிகள் அனைவரும் ஜெய்ஷ் மற்றும் அல் பத்ரைச் சேர்ந்தவர்கள் என்றும் கிருஷ்ணா காட்டிக்கு எதிரே உள்ள மாதர்பூர் மற்றும் நட்டார் பகுதிகளிலும் சுமார் 20 பயங்கரவாதிகள் உலவி வருவதாகவும்,மேலும் 35 தீவிரவாதிகள் பிஞ்சர் காலிக்கு எதிரே உள்ள லாஞ்சோட்டில் முகாமிட்டுள்ளனர்.
மேலும் 25 பயங்கரவாதிகள் அடங்கிய குழு தக் கானா பகுதியில் இருந்து கொண்டு இந்தியாவை நோட்டமிட்டு நுழைய திட்டமிட்டு காத்து இருப்பதாக எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்குள் நுழைய தீவிரவாதிகள் அனைவருக்கும் பாகிஸ்தான் ராணுவ உதவி புரிய தயாராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு அனைத்து எல்லையிலும் தீவிரவாதிகளின் முகாம்கள் குறித்து மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், 250 முதல் 300 பயங்கரவாதிகள் ஏவுதளங்களில் உள்ளனர்.
ஊடுருவும் வாய்ப்புகளைத் தேடுகிறார்கள், ஆனால் இந்தியாவின் பாதுகாப்பு கட்டமைப்பு மிக வலுவடைந்து விட்டது. அதனால் தீவிரவாதிகள் இதில் வெற்றியடைய மாட்டார்கள்.
காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் தற்போது 200 பயங்கரவாதிகளுக்கும் குறைவானவர்களே இருக்கக்கூடும்.
வடக்கு காஷ்மீரில் 50 முதல் 60 பயங்கரவாதிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.ஆனால் தீவிரவாதிகளில்பெரும்பாலோர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறினார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…