சம்பளத்தை கேட்ட ஊழியரை நாயை வைத்து கடிக்க செய்த உரிமையாளர்.!

Published by
Ragi

சப்னா என்ற பெண் ஊழியர் உரிமையாளரான நிகிதாவிடம் சம்பளத்தை கேட்க, அவர் தனது வீட்டு நாயை வைத்து ஊழியரை கடிக்க செய்துள்ளார்.

டெல்லியில் ஆயுர்வேத ஸ்பா சென்டர் நடத்தி வருபவர் நிகிதா. இவரது கடையில் வேலை செய்பவர் சப்னா. இவர் அந்த ஸ்பா சென்டரில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை பணி புரிந்ததை அடுத்து, தான் வேலை செய்ததற்கான சம்பளத்தை உரிமையாளரான நிகிதாவிடம் கேட்டுள்ளார். இதையடுத்து, நிகிதா நாயை விட்டு கடிக்க வைத்துள்ளார். இதனால் அந்த பெண் ஊழியரின் முகத்தில் 15 தையல்கள் போடப்பட்டுள்ளது மட்டுமில்லாமல், அவரது 2 பற்களும் உடைந்துள்ளது.

ஜூன் 11-ஆம் தேதி நடந்த இச்சம்பவத்திற்கு டெல்லி காவல்துறையானது 20 நாட்கள் அவகாசம் எடுத்த பின்னர் ஜூலை 2-ம் தேதி எஃப். ஐ. ஆர் பதிவு செய்தனர். அதுவும் இந்த விவகாரத்தில் எம். எல். ஏ மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் தலையிட்ட பின்னரே எஃப். ஐ. ஆர் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை குற்றம்சாட்டப்பட்ட நிகிதா மீது காவ‌ல்துறை‌யின‌ர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதனையடுத்து சப்னா தனது சிகிச்சையை எய்ம்ஸ் மருத்துவமனையில் செய்து வந்தார். தற்போது நிகிதா தனது இடத்திலிருந்து தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

Published by
Ragi

Recent Posts

“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!

“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!

தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…

21 minutes ago

தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!

தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…

26 minutes ago

கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…

41 minutes ago

“மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு” – அரசாணை வெளியீடு.!

நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…

45 minutes ago

“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!

சென்னை : கடந்த ஏப்ரல் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தவெக சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில்…

1 hour ago

சிறுமி உயிரிழப்பு எதிரொலி : மழலையர் பள்ளி உரிமம் ரத்து!

மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…

2 hours ago