தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்..! மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார்..!
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட்ட காவிரி நீர் மேலாண்மை உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு மாநில அரசு கோரிக்கை விடுக்கும் என்று துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
மழை குறைவாக இருப்பதால் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம். இருந்தும் நாங்கள் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டோம்.
இதனால் கர்நாடகாவில் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துவோம் என டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.