இந்தியா தன்னை வலுப்படுத்திக்கொள்வது தான் ஒரே வழி – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!

டிப்கனெக்ட் 2.0 எனும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய தன்னை வலுப்படுத்திக் கொள்வதற்கு பல்வேறு துறைகளை மேம்படுத்த வேண்டும்.
எனவே நாம் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியம். அதுமட்டுமில்லாமல் நாம் உருவாக்கக்கூடிய தொழில்நுட்பம் நம்மிடம் மட்டுமே இருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் அது பயனற்றதாகிவிடும்.
ஒவ்வொரு முறையும் ஏற்படக்கூடிய புதிய ஆபத்துகள் சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது. இன்னும் நாம் கொரோனா நெருக்கடியிலிருந்து மீண்டு வரவில்லை. ஆனால் அதற்குள் உலகம் உக்ரைன் போரை எதிர்கொண்டு வருகிறது. எனவே இந்தியா பாதுகாப்பு, அமைதி மற்றும் உறுதியாக தன்னை நிலைக்க வைப்பதற்கு தன்னைத்தானே வலுப்படுத்திக் கொள்வதை தவிர வேறு வழியில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025