ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் ஒரு அரிய மீன் சிக்கியுள்ளது. இதன் விலை ரூ.2.40 லட்சம்.
ஆந்திராவில் உள்ள கோதாவரி ஆற்றில் அங்கிருக்கும் மீனவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். எப்போதும் போல் நேற்றும் மீன் பிடிக்க கோதாவரி ஆற்றிற்கு சென்றுள்ளார். அப்போது அவர்களது வலையில் மிகப்பெரிய மீன் ஒன்று சிக்கியுள்ளது. இதனை பார்த்த மீனவர்கள் இதை கரைக்கு கொண்டு வர முடிவு செய்தனர். பிச் என்ற வகையை சேர்ந்த இந்த மீன் அரிய வகை மீன்.
மேலும் இந்த மீனில் மருத்துவகுணங்கள் அதிகம் உள்ளது. இதன் வயிற்று பகுதியில் இருக்கும் திரவம் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. அதன் காரணத்தால் இந்த அரியவகை மீனுக்கு மவுசு கூடி போனது. இதை வாங்க அங்கிருந்த பலரும் போட்டியிட ஆரம்பித்துள்ளனர். அதன் காரணத்தால் இந்த மீனை ஏலம் விட முடிவு செய்துள்ளனர்.
இந்த ஏலத்தில் கடைசியாக அந்த பகுதியை சேர்ந்த தரகொண்டா என்ற மீன் வியாபாரி, ரூ.2.40 லட்சத்திற்கு இந்த மீனை வாங்கியுள்ளார். அரியவகை மீன் என்பதால் இந்த மீனுக்கு மதிப்பு அதிகம் இருக்கும் என்று மீனவர்கள் தரப்பில் பேசப்படுகிறது.
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…