முப்படைகளுக்கும் ஒரே தளபதி,முக்கிய சீர்திருத்தம் – பிரதமர் மோடி

Default Image
  • முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டார்.
  • முப்படைகளுக்கும் ஒரே தளபதி என்பது ராணுவத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய சீர்திருத்தமாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்தில் முப்படைகளுக்கும் தனித்தனியே தலைமை தளபதிகள் உள்ளனர்.. ராணுவ ஜெனரல், கடற்படை தலைமை தளபதி, விமானப் படை தலைமை தளபதி ஆகியோர் இதுவரை முப்படைகளின் தலைமை தளபதிகளாக இருந்தனர்.

இந்த முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதி ஒருவரை நியமிப்பது தொடர்பாக நீண்டகாலமாக மத்திய அரசு ஆலோசித்து வந்தது. அண்மையில் சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்ததையடுத்து முப்படைகளின் தலைமைத் தளபதி பதவியை  உருவாக்கப்பட்டு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.இதனால் முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம் செய்தது  மத்திய அரசு.பின்னர்  பிபின் ராவத் முப்படைகளின் தலைமைத் தளபதியாக பதவியேற்றார்.

இந்நிலையில் முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவில்,முப்படைகளுக்கும் ஒரே தளபதி என்பது ராணுவத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய சீர்திருத்தமாகும் .போர் களத்தில் மாறிவரும் சவால்களை எதிர்கொள்ள இந்த சீர்திருத்தம் உதவியாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - TN Rain
06.11.2024 Power Cut Details
VCK Leader Thirumavalavan - Tamilnadu CM MK Stalin
yellow alert rain
VCK Leader Thirumavalavan - TVK Leader Vijay
Sunil Gavaskar
Bengaluru