உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பெலா கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதி 2 மாதத்திற்கு முன் தங்கள் இரண்டு மகன்களுக்கு பிறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கிராம மேம்பாட்டு அதிகாரி சுசில் சந்த் அக்னிஹோத்ரி மற்றும் தலைவர் பிரவீன் மிஸ்ரா ஆகிய இருவரும் ஒவ்வொரு சான்றிதழுக்கும் தலா 500 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
ஆனால் அந்த தம்பதி அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க மறுத்து உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அதிகாரிகள் ஜூன் 13, 2016 -ம் ஆண்டு என சான்றிதழ் குறிப்பிடுவதற்கு பதிலாக ஜூன் 13 ,1916 எனவும் , ஜனவரி 6 , 2018 என்பதற்கு பதிலாக ஜனவரி 6 1918 என மாற்றி குறிப்பிட்டு பிறப்பு சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்டது அந்த தம்பதியின் உறவினர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கிராம மேம்பாட்டு அதிகாரி மற்றும் தலைவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு பெரெய்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,…
ராமேஸ்வரம் : புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…