இது என்னடா கொடுமை ..! 500 ரூபாய் லஞ்சம் தராததால் 100 வருடத்திற்கு முன் பிறந்ததாக சான்றிதழ் கொடுத்த அதிகாரி.!

Default Image
  • உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பெலா கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதி இரண்டு மகன்களுக்கு பிறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
  • அதிகாரிகள் ஒவ்வொரு சான்றிதழுக்கும் தலா 500 ரூபாய் லஞ்சம் கேட்டனர். அவர்கள் தராததால் 100 வருடத்திற்கு முன் பிறந்ததாக கூறி பிறப்பு சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பெலா கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதி 2 மாதத்திற்கு முன் தங்கள் இரண்டு மகன்களுக்கு பிறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கிராம மேம்பாட்டு அதிகாரி சுசில் சந்த் அக்னிஹோத்ரி மற்றும் தலைவர் பிரவீன் மிஸ்ரா ஆகிய இருவரும்  ஒவ்வொரு சான்றிதழுக்கும் தலா 500 ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

ஆனால் அந்த தம்பதி அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க மறுத்து உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அதிகாரிகள் ஜூன் 13, 2016 -ம் ஆண்டு என சான்றிதழ் குறிப்பிடுவதற்கு பதிலாக ஜூன் 13 ,1916 எனவும் , ஜனவரி 6 , 2018 என்பதற்கு பதிலாக ஜனவரி 6 1918 என மாற்றி குறிப்பிட்டு பிறப்பு சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்டது அந்த தம்பதியின் உறவினர்கள்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கிராம மேம்பாட்டு அதிகாரி மற்றும்  தலைவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு பெரெய்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்