புதிய வகை கொரோனா.. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 70-ஐ கடந்தது!
பிரிட்டனில் பரவி வரும் உருமாறிய புதிய வகையான கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவதொடங்கிய நிலையில், அதில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பரவலே இன்னும் குறையாத நிலையில், பிரிட்டனில் புதிய வகையான கொரோனா வைரஸ் வேகமாக பரவத்தொடங்கியது. இதனால் 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. ஆயினும் ஸ்பெயின், ஜப்பான், ஆகிய நாடுகளில் இந்த புதிய வகையான கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அந்தவகையில் உருமாறிய கொரோனா, இந்தியாவிலும் பரவதொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசு , உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அறிவித்து வருகிறது. அந்தவகையில் இதுவரை 71 பேருக்கு இந்த உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு தனி வார்டில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.