இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியது…!
இந்தியாவில் இதுவரை 4.20 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஓராண்டு காலமாக கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வந்த நிலையில், தற்போது பல நாடுகளில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் சமீப நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 4.20 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 3.48 கோடி பேருக்கும், இரண்டாவது டோஸ் 72.21 லட்சம் பேருக்கும் போட பட்டதாகவும், இந்தியாவில் ஒரே நாளில் 27.23 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 40.60 லட்சம் தடுப்பூசிகளும் ராஜஸ்தானில் 40.47 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில், 19.64 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.