இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியது
இந்தியாவில் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக ஊரடங்கு உத்தரவு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.தொடர்ந்து கொரோனா தொடர்பான பரிசோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்தியாவில் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நாடு முழுவதும் 19,984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. 3,870 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் .