இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பாதிப்பும் தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இதனால் முடிவடைய இருந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.நாளை முதல் ஒரு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 15,712 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது. 2231 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.