இந்தியாவில் இந்தியாவில் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 56 கோடியாக உயர்வு…!!

Default Image

இந்தியாவில்  பயன்பாடு 56 கோடியை எட்டியுள்ளதாக டிராய் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது.
2016ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவின் இணையதள பயன்பாடு 65 சதவிகிதமாக இருந்தது. இந்த பயன்பாடு தற்பொழுது 50 கோடியை கடந்துள்ளது.கடந்த செப்டம்பர் மாத இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி இந்தியாவின் நேரோ பேண்ட் மற்றும் பிராட்பேண்ட் வைத்திருப்போரின் எண்ணிக்கை 56 கோடியாக உள்ளது.
2016ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி இந்த எண்ணிக்கை 34 கோடியாக இருந்தது. 2017 மார்ச் மாதத்தில் 42 கோடியாக இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 51 கோடியாகவும் செப்டம்பர் 30ம் தேதியில் 56 கோடியாக இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.ஜியோ வருகைக்கு பிறகே இணைய பயன்பாட்டின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. நகர்ப்புறத்தில் 36 கோடியும் கிராமப்புறங்களில் 19 புள்ளி 4 கோடி பேரும் இணையதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 45 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்