தலைநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.12 லட்சமாக உயர்வு!
டெல்லியில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 1,12,494 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அங்கு புதிதாய் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,12,494 ஆக அதிகரித்தது.
அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 2,276 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 89,968 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 79.97 சதவீதமாக அதிகரித்தது.
மேலும், ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,371 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 19,155 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.