பெங்களூருவில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 121 இல் இருந்து 141 ஆக உயர்வு..!
பெங்களூரு எல்லைக்குள் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 121 இல் இருந்து 141 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூரு முனிசிபல் கார்ப்பரேஷனின் சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில், பெங்களூரு எல்லைக்குள் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 121 இல் இருந்து 141 ஆக உயர்ந்துள்ளது. பெங்களூரில் நேற்று 1,041 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது.
மகாதேவபுராவில் அதிகபட்சமாக 44 கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளன. அதைத் தொடர்ந்து பொம்மனஹாலி (41) கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ளது. யெலஹங்கா மண்டலத்தில் இதுபோன்ற 10 பகுதிகளும், தாசரஹள்ளி மற்றும் ஆர்ஆர் நகர் தலா ஒரு கட்டுப்பாட்டு மண்டலமும் உள்ளன.