இந்தியாவில் பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது..பலி எண்ணிக்கை 75 ஆக உயர்ந்தது.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்களை சமூக விலகலை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,072 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3,072 பேரில் 213 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து உலக முழுவதும் கொரோனா வைரஸ் பரவி இருப்பதால், இன்று மட்டும் 6,000 பேர் உலகளவில் உயிரிழந்துள்ளனர். அதிகமாக பாதிக்கப்பட்ட அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் கொத்துக்கொத்தாக உயிரை கொன்று குவித்து வருகிறது கொரோனா. இந்நிலையில் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,39,120 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 61,144 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து இதுவரை 2,36,214 பேர் குணமடைந்துள்ளார்கள் என்று உலக சுகாதாரத்துறை கூறியுள்ளது.