துணை முதல்வர் பதவி குறித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியானது,பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.இதையடுத்து கடந்த 7 ஆம் தேதி ரங்கசாமி முதல்வராக பதவியேற்று கொண்டார்.
இதனையடுத்து,சபாநாயகர் பதவி மற்றும் 3 அமைச்சர் பதவிகளை கேட்டு முதல்வர் ரங்கசாமி அவர்களை பாஜக வலியுறுத்தி வந்தது.ஆனால் 2 அமைச்சர் பதவிக்கு மேல் தரமுடியாது என்று முதல்வர் தெரிவித்ததால், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவியது.
இதன்காரணமாக,அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு காலதாமதமாகி வருகிறது. இதற்கிடையில்,பாஜகவை சேர்ந்த 3 பேரை எம்எல்ஏ ஆக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.இதனால்,முதல்வர் ரங்கசாமி மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தி ஏற்பட்டது. பின்னர், முதல்வர் ரங்கசாமியிடம்,தங்களுக்கு துணை முதலமைச்சர் பதவி மற்றும் 3 அமைச்சர் பதவிகள் கட்டாயம் வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து,புதுச்சேரி அமைச்சரவை பங்கீடு தொடர்பாக பாஜக தொடர்ந்து கொடுத்த அழுத்தத்துக்கு முதல்வர் ரங்கசாமி பணிந்துள்ளதாகவும்,பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ரங்கசாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில்,பாஜகவில் இருந்து சபாநாயகர் மற்றும் அமைச்சர் பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து கட்சிக்குள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அதன்பின்னர்,பதவிகளுக்கான பெயர் பட்டியல் தயாரானது.
இந்நிலையில்,இந்த பெயர் பட்டியலை,முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கொடுப்பதற்காக அவரின் வீட்டிற்கு,பாஜக மேலிட பொறுப்பாளர் எம்.பி.ராஜீவ் சந்திரசேகர் மற்றும் பாஜகவினர் தற்போது வருகை புரிந்தனர்.
அதன்பின்னர்,சபாநாயகர் மற்றும் அமைச்சர் பதவிகளுக்கான பெயர்பட்டியலை குறித்து பேசாமல்,துணை முதல்வர் பதவி,இலக்கா பங்கீடு தொடர்பாக எம்.பி.ராஜூ சந்திரசேகர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனால்,முதல்வர் ரங்கசாமி கடும் கோபம் கொண்டார்.
இதனையடுத்து எம்.பி.ராஜூ சந்திரசேகரிடம்,’இது தொடர்பாக நீங்கள் என்னிடம் பேசக்கூடாது,ஏனெனில்,டெல்லியில் இருக்கும் உங்கள் தலைவர் அமித்ஷாவிடம் நான் ஏற்கனவே பேசிவிட்டேன்”,என்று திட்டவட்டமாக முதல்வர் ரங்கசாமி பதிலளித்துள்ளார்.
மேலும்,துணை முதல்வர் பதவி கிடயாது என்பதில் உறுதியாக உள்ளதாகவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இதனால், ஏமாற்றத்துடன் பாஜகவினர் திரும்பினர்.இதன்காரணமாக, துணை முதல்வர் பதவி குறித்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…