உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே மத்திய அரசுடன் 9வது கட்ட பேச்சுவார்த்தை என விவசாயிகள் பிரதிநிதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் 48-வது நாளாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது. வரும் 15-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டதிக்ரு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், நீதிமன்றம் உத்தரவை பொறுத்தே மத்திய அரசுடன் வரும் 9-ஆம் தேதி பேச்சுவார்த்தை என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனிடையே, புதிய சட்டங்களை திரும்ப பெறுதல், குறைந்த ஆதார விலையை உறுதிப்படுத்துதல் போன்றவைகள் விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. மத்திய அரசு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் இதுவரை 8 கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை.
இறுதியாக நடந்த 8வது விவசாயிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை கூட தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து, மீண்டும் வரும் 9-ஆம் தேதி விவசாய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் விவசாயிகள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமேரிக்கா : தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து வாக்கு…
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…
சென்னை : நடைபெற்று வரும் அமெரிக்க தேர்தல் நிறைவடைந்து தற்போது வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…