உச்சநீதிமன்ற உத்தரவை பொறுத்தே அடுத்த கட்ட முடிவு – விவசாயிகள் திட்டவட்டம்

Farmers' representatives have stated that the 9th phase of talks with the central government is in line with the Supreme Court ruling.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே மத்திய அரசுடன் 9வது கட்ட பேச்சுவார்த்தை என விவசாயிகள் பிரதிநிதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் 48-வது நாளாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது. வரும் 15-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டதிக்ரு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நீதிமன்றம் உத்தரவை பொறுத்தே மத்திய அரசுடன் வரும் 9-ஆம் தேதி பேச்சுவார்த்தை என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனிடையே, புதிய சட்டங்களை திரும்ப பெறுதல், குறைந்த ஆதார விலையை உறுதிப்படுத்துதல் போன்றவைகள் விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. மத்திய அரசு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் இதுவரை 8 கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை.

இறுதியாக நடந்த 8வது விவசாயிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை கூட தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து, மீண்டும் வரும் 9-ஆம் தேதி விவசாய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் விவசாயிகள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.