அடுத்த ஆபத்து.! வருகிறது “ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூ” அசாமில் 13,000க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

அசாமில் ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூ என்ற வைரசுக்கு இதுவரைக்கும் 13,000க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்து இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா என்ற கொடிய நோயால் பெரும் இழப்பை சந்தித்து வருகிறோம். இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில், நாட்டின் முதன்முறையாக அசாம் மாநிலத்தில் புதிதாக கண்டறியப்பட்டு இருக்கும் ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூ என்ற வைரசுக்கு இதுவரைக்கும் 13,013 பன்றிகள் உயிரிழந்து இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் அசாமில் அரசு பன்றிகளை அழிக்காமல் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சலில் இருந்து பன்றிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அசாம் மாநிலத்தில் பன்றிகளின் உயிரிழப்புக்கு காரணமான ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் இருந்துதான் பரவியது என்று கூறப்படுகிறது. இந்த பன்றி காய்ச்சல் முதலில் அருணாசலப் பிரதேசத்தில் தாக்கியது. இதைத்தொடர்ந்து தற்போது அசாமில் பன்றிகளை கொன்று வருகிறது. பின்னர் இந்த ப்ரிக்கன் ஸ்வைன் புளூ என்ற வைரசுக்கும் தற்போது கொன்று குவித்து வரும் கொரோனா வைரசுக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால், இந்த ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல் வைரஸ் மனிதர்களின் உடலில் தங்கி இருந்து பன்றிகளை கொல்லக்கூடியது. 

மேலும், நாட்டிலேயே முதலில் அசாமில்தான் இந்த ஆப்ரிக்கன் ஸ்வைன் புளூ வைரசுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அசாமில் இதுவரை 13,013 பன்றிகள் உயிரிழந்துள்ளது. இதையடுத்து அம்மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அதுல் போரா காஸிரங்கா அங்குள்ள தேசிய பூங்காவிற்கு சென்று பன்றிகள் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். அதன்பின் பேசிய அவர், காட்டுப் பன்றிகள் கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்கவும், வீட்டுப் பன்றிகள் பூங்காவுக்குள் நுழையாமல் இருக்கவும், பூங்காவுக்குட்பட்ட பகுதியில் 6 அடி ஆழத்திலும், 2 அடி அகலத்திலும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்! 

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…

4 hours ago

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

5 hours ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

6 hours ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

7 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

7 hours ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

7 hours ago