அதிகரித்து வரும் வைரஸ் காய்ச்சல்.! ஐசிஎம்ஆர் காய்ச்சல் மைய தலைவர் கூறும் அறிவுரை.!
தற்போது பரவும் புதிய வைரஸ் காய்ச்சல் பருவகால காய்ச்சல் தான். மக்கள் அச்சப்பட தேவையில்லை. – தேசிய காய்ச்சல் பிரிவு தலைவர் வர்ஷா வர்ஷா போட்தார்.
தற்போது ஒரு சில மாதங்களாக காய்ச்சல் பாதிப்பு என்பது சற்று அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால், தமிழக அரசும், தற்போது பல்வேறு இடங்களில் காய்ச்சல் முகாம்களை நடத்தி வருகின்றன. இது அவ்வப்போது வரும் பருவகால வைரஸ் காய்ச்சல் என்றாலும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
புதிய காய்ச்சல் :
இந்த காய்ச்சல் தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு ஐஎம்சிஆர், தேசிய காய்ச்சல் பிரிவு தலைவர் வர்ஷா வர்ஷா போட்தார் கூறுகையில், தற்போது பரவி வரும் H3N2, இன்ஃப்ளூயன்ஸா, அடினோவைரஸ் மற்றும் கோவிட் 19 ஆகியவற்றில் இருந்து தொற்று அதிகரித்துள்ளது. இருந்தும், காற்றில் உள்ள வைரஸ்கள் ஆபத்தானது அல்ல என குறிப்பிட்டுளளார்.
பருவகால காய்ச்சல் :
கடந்த சில மாதங்களாக காய்ச்சல் பாதிப்புகளால் மருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்டு வருவதை கவனித்து வருகிறோம் எனவும், அது, பருவகால காய்ச்ல் எனவும் , அதற்கு வழக்காமன மருந்துகள், தனிமை படுத்துதல் போதுமானது எனவும் ஐஎம்சிஆர், தேசிய காய்ச்சல் பிரிவு தலைவர் வர்ஷா வர்ஷா போட்தார் குறிப்பிட்டார்.