New tax rules: வருமான வரியில் மாற்றம் செய்துள்ள புதிய விதிகள் இன்று முதல் அமலாகிறது.
2024-25 புதிய நிதியாண்டு இன்று (ஏப்ரல் 1) தொடங்கியுள்ள நிலையில், இந்திய வருமான வரி விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. வரி திட்டமிடலை எளிதாகுவதற்கும், வரி செலுத்துபவர்களுக்கு சலுகைகளை அளிப்பதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் மத்திய அரசு தாக்கல் செய்திருந்த 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த புதிய வரி முறை (New Tax Regime) இயல்பான தேர்வாக (default option) அமல்படுத்தப்படும். அதன்படி இந்த புதிய வரி முறையில் (tax slabs), ரூ.3,00,000 வரை 0% வரி, ரூ. 3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% வரியும், ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10% வரியும், ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15% வரியும் விதிக்கப்படும்.
மேலும், ரூ.12 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரியும், ரூ.15 லட்சத்திற்கு மேற்பட்ட வருமானத்திற்கு 30% வரியும் விதிக்கப்படும். புதிய வரி முறை இயல்பான தேர்வாக இருக்கும் என்றாலும், வரி செலுத்துபவர்கள் பழைய முறையைத் தேர்ந்தெடுக்கும் வசதி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு பழைய வரி முறையில் மட்டுமே வழங்கப்பட்ட ரூ.50,000 என்ற நிலையான விலக்கு தற்போது புதிய வரி முறையிலும் பொருந்தும். இதனால், புதிய வரி முறையில் வரி செலுத்துபவர்களின் வரிக்குட்பட்ட வருமானம் கூடுதலாக குறையும். அதேசமயம், ரூ.5 கோடிக்கு மேற்பட்ட வருமானத்திற்கு விதிக்கப்படும் அதிகபட்ச கூடுதல் வரி 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, புதிய வரி முறையில் ரூ.5 லட்சமாக இருந்த வரி விலக்கு உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்படவுள்ளதாகவும் நிதியமைச்சர் கடந்த பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். அதாவது, ஒரு தனிநபர் புதிய வரி முறையைத் தேர்ந்தெடுத்திருந்தால், ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…