வருகிற நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்வதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் சிலிண்டரை முன்பதிவு செய்யும்போது பதிவு செய்யப்பட்டுள்ளவர்களின் செல்போன் எண்ணுக்கு ஒரு ஓடிபி எனப்படும் ஒருமுறை கடவுச்சொல், அதாவது ‘ஒன் டைம் பாஸ்வேர்ட்’ அனுப்பி வைக்கப்படும். சிலிண்டர் விநியோகம் செய்ய வரும் ஊழியரிடம் இந்த எண்ணை கூற வேண்டும். அப்போதுதான், சிலிண்டர் வழங்கப்படும். இது நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.ஓடிபி எண்ணை கொடுக்காத வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் வழங்கப்பட மாட்டாது. இதேபோல், சிலிண்டர் நிறுவனத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லையென்றால், விநியோகம் செய்ய வரும் ஊழியரால் புதிய மொபைல் எண்ணை பயன்பாட்டில் பதிவு செய்ய முடியும்.
அப்போது, ஓடிபி.யை உருவாக்க முடியும்.வாடிக்கையாளரின் முகவரி மற்றும் செல்போன் எண் தவறாக இருந்தால், சிலிண்டர் வழங்கப்படுவது நிறுத்தப்படும்.
* இதுசோதனை அடிப்படையில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் அமலாகிறது. இது முதல் கட்டமாக 100 நகரங்களில் கொண்டு வரப்படும். சிலிண்டர்கள் முறைகேட்டை தவிர்க்கும் வகையில், இந்த புதிய முறையை எண்ணெய் நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளன.
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…