இனி ஓ.டி.பி சொன்னால் தான் சிலிண்டர்…. முறைகேட்டை தடுக்க புதிய திட்டம்….

Default Image

வருகிற நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்வதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் சிலிண்டரை முன்பதிவு செய்யும்போது பதிவு செய்யப்பட்டுள்ளவர்களின் செல்போன் எண்ணுக்கு ஒரு ஓடிபி எனப்படும் ஒருமுறை கடவுச்சொல், அதாவது ‘ஒன் டைம் பாஸ்வேர்ட்’ அனுப்பி வைக்கப்படும். சிலிண்டர் விநியோகம் செய்ய வரும் ஊழியரிடம் இந்த எண்ணை கூற வேண்டும். அப்போதுதான், சிலிண்டர் வழங்கப்படும். இது நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.ஓடிபி எண்ணை கொடுக்காத வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் வழங்கப்பட மாட்டாது. இதேபோல்,  சிலிண்டர் நிறுவனத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லையென்றால், விநியோகம் செய்ய வரும் ஊழியரால்  புதிய மொபைல் எண்ணை பயன்பாட்டில் பதிவு செய்ய முடியும்.

அப்போது, ஓடிபி.யை உருவாக்க முடியும்.வாடிக்கையாளரின் முகவரி மற்றும் செல்போன் எண் தவறாக இருந்தால், சிலிண்டர் வழங்கப்படுவது நிறுத்தப்படும்.
* இதுசோதனை அடிப்படையில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் அமலாகிறது. இது முதல் கட்டமாக 100 நகரங்களில்  கொண்டு வரப்படும். சிலிண்டர்கள் முறைகேட்டை தவிர்க்கும் வகையில், இந்த புதிய முறையை எண்ணெய் நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்