ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் மாதம் 30-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை 5 கட்டமாக நடைபெற்றது. இதில் 81 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டது. காங்கிரஸ் – ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியுடன் இணைந்து களம் கண்டது.
இந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி 47 தொகுதிகளில் வெற்றிபெற்றது. தனித்து போட்டியிட்ட பாஜக 25 இடங்களை மட்டுமே கைப்பற்றி இருந்தது. அதனால், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த ஹேமந்த் சோரன் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜார்கண்ட் மாநிலத்தின் 11வது முதலமைச்சராக ஹேமந்த் சோரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு ஆளுநர் திரௌபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்திரனாக கலந்துகொண்டனர்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், ஜார்க்கண்டில் புதிய கூட்டணி அரசாங்கம் அனைவருக்காகவும் பணியாற்றும்.குடிமக்களின் நலனுக்காகவும்,மாநிலத்தில் அமைதி மற்றும் செழிப்பான சகாப்தத்தை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…