தாய் மொழியை ஆதரிக்கும் புதிய கல்வி கொள்கை.. அதனை அரசியல் ஆக்காதீர்கள்.! தமிழிசை பேச்சு.!
புதிய கல்வி கொள்கை தாய் மொழியை ஆதரிக்கிறது. மாணவர்களுக்கு தேவைப்பட்டால் அடுத்த மொழியை கற்க போகிறார்கள். – தமிழிசை சவுந்தரராஜன்
தூத்துக்குடியில் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டார்.
அவர் பேசுகையில், புதிய கல்வி கொள்கை பற்றி பேசியிருந்தார். புதிய கல்வி கொள்கை தாய் மொழியை ஆதரிக்கிறது. மாணவர்களுக்கு தேவைப்பட்டால் அடுத்த மொழியை கற்க போகிறார்கள். இதில் அரசியல் செய்யாதீர்கள்.
இன்னோர் மொழியை கற்பது , அவர்களுக்கு அதிக வாய்ப்புகளை பெற்று தரும் என்று கூறினார். இங்கு யாரும் கல்வியை திணிக்கவில்லை. அனால், திணிப்பதாக கூறுகிறார்கள். மேலும் கூறுகையில், மகாகவி பாரதியாருக்கு புதுச்சேரி கடற்கரையில் வானுயர சிலை நிறுவப்படுவதற்கு புதுச்சேரி முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் எனவும் தமிழிசை சவுந்தரராஜன் அந்த நிகழ்ச்சியில் பேசினார்.