காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் நானா பட்டோலி, மஹாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நீட் தேர்வு வியாபம் ஊழல் போன்று மாறி இருப்பதால், இந்த தேர்வை மகாராஷ்டிராவில் ரத்து செய்ய வேண்டும்.
இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த 13-ம் தேதி நடைபெற்றது. இந்த நீட் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு குரல் எழுந்ததை தொடர்ந்து, மற்ற மாநிலங்களிலும் எதிர்ப்பு குரல் எழுகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் நானா பட்டோலி, மஹாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நீட் தேர்வு வியாபம் ஊழல் போன்று மாறி இருப்பதால், இந்த தேர்வை மகாராஷ்டிராவில் ரத்து செய்ய வேண்டும் என்றும், மாநில தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் நீட் தேர்வு குறித்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வின் போது, வினாத்தாள் வெளியாகி பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. சிபிஎஸ்இ போன்ற மத்திய பாடத்திட்ட மாணவர்கள், மாநில பாடத்திட்ட மாணவர்களைவிட அதிக அளவில் நீட் மதிப்பெண்களை பெறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…