தேர்வர்கள் கவனத்திற்கு…நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – யுஜிசி முக்கிய அறிவிப்பு!
ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (JRF) மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்காக நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வுக்கு ஏப்ரல் 30 முதல் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டன.இதனையடுத்து,யுஜிசி நெட் தேர்வுக்கு மே 20 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது.அதன்படி, https://ugcnet.nta.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 20 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில்,தற்போது மே 30 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.மேலும்,இது தொடர்பாக,யுஜிசி தலைவர் எம் ஜெகதேஷ் குமார் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“UGC-NET டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022 ஆகியவற்றிற்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிப்பது தொடர்பாக விண்ணப்பதாரர்கள் வேண்டுகோளுக்கு இணங்க,தேர்வுக்கான ஆன்லைன் சமர்ப்பிப்பு மற்றும் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதியை 30 மே 2022 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்று ட்வீட் செய்துள்ளார்.
In pursuant to representations from the candidates, regarding submission of online application form for UGC-NET December 2021 and June 2022 (merged cycles), it has been decided to extend the last date for submission and fee payment to 30 May 2022.
— Mamidala Jagadesh Kumar (@mamidala90) May 22, 2022
குறிப்பாக,கொரானா காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் தேர்வு நடைபெறாமல் இருந்த நிலையில்,அத்தேர்வும்,நடப்பு ஆண்டில் நடைபெறவுள்ள தேர்வும் ஒரே சமயத்தில் ஜூன் மாதத்தில் நடைபெறுகிறது.ஆனால்,தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
UGC NET 2022: எப்படி விண்ணப்பிப்பது:
- https://ugcnet.nta.nic.in/ என்ற இனையதளத்திற்கு செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில்(homepage) உள்ள UGC-NET டிசம்பர் 2021 & ஜூன் 2022க்கான விண்ணப்பப் படிவ இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் ஒரு புதிய வலைப்பக்கத்திற்கு அனுப்பப்படுவீர்கள்.முதலில் புதிய பதிவை (New Registration) கிளிக் செய்து பின்னர் விண்ணப்ப படிவத்தை நிரப்ப தொடரவும்.
- தேவையான விவரங்களை உள்ளிட்டு,ஆவணங்களைப் பதிவேற்றி தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தவும்.
- உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து உறுதிப்படுத்தல் பக்கத்தைப்(confirmation page) பதிவிறக்கவும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.1,100; பொது-EWS, OBC-NCL-க்கு ரூ.550 மற்றும் SC, ST, PwD, மூன்றாம் பாலினத்தவர்களுக்கள் ரூ.275 செலுத்த வேண்டும் என்று யுஜிசி அறிவித்துள்ளது.