நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.சுதந்திரத்திற்கு முன்பு அசோசியேட்டட் நிறுவனத்தை ஜவஹர்லால் நேரு தொடங்கினார்.இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக் இருந்த நிலையில்,நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாகின.இந்த நிறுவனத்திற்கு காங்கிரஸ் சார்பில் 90 கோடி ரூபாய் கடனாக கொடுக்கப்பட்டது.
இதனை திருப்பி செலுத்தாத நிலையில்,நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை கடந்த 2008 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.இந்நிலையில்,2010 ஆண்டு யங் இந்தியா நிறுவனத்திற்கு நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ.50 லட்சத்திற்கு மாற்றியதில் முறைகேடு நடைபெற்றதாக சுப்பிரமணிய சுவாமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும்,இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நாளை ஆஜராக ராகுல் காந்திக்கும்,ஜூன் 8 ஆம் தேதி ஆஜராக சோனியா காந்திக்கும் அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை :அசத்தலான சுவையில் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் கல்கல் ரெசிபி செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ரவை -50…
பிரேசில் : தெற்கு பிரேசிலின் கிராமடோ நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறிய ரக விமானம் விபத்தானத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்த நிலையில்,…
கடலூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டியளிக்கையில், 2026 சட்டமன்ற…
சென்னை : தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை இனி பொதுமக்கள் பார்வையிட முடியாதபடி, தேர்தல் விதிகளை…
தெலங்கானா: புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்க்க வந்தபோது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுன்…
டெல்லி : நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையானது நீட் (NEET) எனும் பொது நுழைவு தேர்வு…