உத்தரபிரதேச அரசுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) நீர் மாசுபாடு அடைந்ததை அடுத்து 120 கோடி அபராதம் விதித்துள்ளது.
தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளால், கோரக்பூரின் ராம்கர் தால், அமி, ரப்தி, ரோகிணி ஆகிய ஆறுகளில் நீர் மாசுபாடு அடைந்து வருகிறது. தொழிற்சாலைகள் மாசு விதிகளை கடைபிடிக்காததற்காக அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு என்ஜிடி உத்தரவிட்டுள்ளது. மேலும் கோரக்பூரில் கழிவுநீர் வெளியேறியதற்கு உத்தரபிரதேச அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் கூறியுள்ளது.
நீர் மாசுபாடு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் காரணியாக உள்ளது என்று என்ஜிடி கூறுகிறது. அசுத்தமான நீர் மூளைக்காய்ச்சல், ஜப்பானிய காய்ச்சல் போன்ற நோய்களை ஏற்படுத்துகிறது, இதனால் கோரக்பூர் மருத்துவக் கல்லூரியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரிழக்கின்றனர்.
மேலும் கோரக்பூரில் உள்ள ராம்கர் தால், ரப்தி நதி உட்பட சுற்றியுள்ள மற்ற ஆறுகளிலும் நீர் மாசுபடுவதைக் கண்காணிக்க 6 பேர் கொண்ட குழுவை என்ஜிடி அமைத்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த இக்குழுவானது ஒரு மாதத்தில் கூடி மாசுபாட்டைக் குறைக்க செயல் திட்டத்தை தயாரிக்க வேண்டும்.
மேலும் 6 மாதங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு குழுவிடம் என்ஜிடி கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…