நீட் தேர்வுக்கான நேரம் மேலும் 20 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
2022-23 ஆம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ்,பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற ஜூலை 17 ஆம் தேதி இந்தியாவில் 543 இடங்களில் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.
மேலும்,நீட் தேர்வுக்கு வருகின்ற மே மாதம் 6 ஆம் தேதி வரை https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும்,தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த அடுத்த மாதம் 7 ஆம் தேதிதான் கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில்,தமிழ்,ஆங்கிலம்,இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் நீட் தேர்வுக்கு,இதுவரை 3 மணி நேரமே வழங்கப்பட்ட நிலையில்,தேர்வுக்கான நேரத்தை மேலும் அதிகரித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி,200 கேள்விகளுக்கு 20 நிமிடம் கூடுதலாக தேர்வு எழுத நேரம் வழங்கப்படுகிறது.அந்த வகையில்,நீட் தேர்வு வருகின்ற ஜூலை 17 ஆம் தேதியன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு(3 மணி 20 நிமிடம்) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக,இந்தியாவுக்கு வெளியே 14 இடங்களில் நீட் தேர்வு நடைபெறும் என என்டிஏ தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…