கடும் மழை, விளைச்சல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தக்காளி விலை கடந்த சில வாரங்களாக கடுமையாக உயர்ந்தது. தமிழகத்தில் 100ஐ தாண்டிய தாக்ககாளி விலை, மும்பை , டெல்லி போன்ற வடமாநில பகுதிகளிலில் கிலோ 250 ரூபாய் வரையில் விற்கப்பட்டது.
தக்காளி விலை கடும் ஏற்றதால் சாமானிய மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனை தடுக்க தமிழக அரசு தமிழகத்தில் தக்காளியை ரேஷன் கடை மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்தது. அதே போல மத்திய அரசும் வடமாநிலங்களில் தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது.
கடந்த மாதம் முதல், மத்திய அமைச்சகம் சார்பில், இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) மற்றும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED) ஆகியவை இணைந்து தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் குறைந்த விலையில் தக்காளியை விற்பனை செய்து வருகின்றன.
NCCF மற்றும் NAFED ஆகிய அமைப்புகள் ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்கின்றன. இவற்றை டெல்லி-என்சிஆர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், கோட்டா ஆகிய பகுதிகளிலும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் லக்னோ, கான்பூர், வாரணாசி, பிரயாக்ராஜ் ஆகிய பகுதிகளிலும் மற்றும் பீகார் மாநிலத்தில் பாட்னா, முசாபர்பூர், அர்ரா, பக்சர் ஆகிய பகுதிகளிலும் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன .
ஆரம்பத்தில், மானிய விலை தக்காளி ஒரு கிலோவுக்கு ரூ.90 என நிர்ணயிக்கப்பட்டது, இதனை தொடர்ந்து விளைச்சல் அதிகரிப்பு, விலை வீழ்ச்சிக்கு ஏற்ப தொடர்ச்சியாக தக்காளி விலை குறைக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 15 முதல் ஒரு கிலோ தக்காளி ரூ.50 என குறைக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 20 நாளை முதல் ஒரு கிலோ தக்காளி ரூ.40ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. நேற்று வரை, 15 லட்சம் கிலோ தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு, நாட்டின் முக்கிய நுகர்வு மையங்களில் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…