நாளை முதல் தக்காளி விலை கிலோ ரூ.40 மட்டுமே.! தேசிய கூட்டுறவு சங்கம் அறிவிப்பு.! 

Tomato

கடும் மழை, விளைச்சல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தக்காளி விலை கடந்த சில வாரங்களாக கடுமையாக உயர்ந்தது. தமிழகத்தில் 100ஐ தாண்டிய தாக்ககாளி விலை, மும்பை , டெல்லி போன்ற வடமாநில பகுதிகளிலில் கிலோ 250 ரூபாய் வரையில் விற்கப்பட்டது.

தக்காளி விலை கடும் ஏற்றதால் சாமானிய மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனை தடுக்க தமிழக அரசு தமிழகத்தில் தக்காளியை ரேஷன் கடை மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்தது. அதே போல மத்திய அரசும் வடமாநிலங்களில் தக்காளியை குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது.

கடந்த மாதம் முதல், மத்திய அமைச்சகம் சார்பில், இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) மற்றும் இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED) ஆகியவை இணைந்து தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் குறைந்த விலையில் தக்காளியை விற்பனை செய்து வருகின்றன.

NCCF மற்றும் NAFED ஆகிய அமைப்புகள் ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து தக்காளியை கொள்முதல் செய்கின்றன. இவற்றை டெல்லி-என்சிஆர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், கோட்டா ஆகிய பகுதிகளிலும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் லக்னோ, கான்பூர், வாரணாசி, பிரயாக்ராஜ் ஆகிய பகுதிகளிலும் மற்றும் பீகார் மாநிலத்தில் பாட்னா, முசாபர்பூர், அர்ரா, பக்சர் ஆகிய பகுதிகளிலும் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன .

ஆரம்பத்தில், மானிய விலை தக்காளி ஒரு கிலோவுக்கு ரூ.90 என நிர்ணயிக்கப்பட்டது, இதனை தொடர்ந்து  விளைச்சல் அதிகரிப்பு, விலை வீழ்ச்சிக்கு ஏற்ப தொடர்ச்சியாக தக்காளி விலை குறைக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 15 முதல் ஒரு கிலோ தக்காளி ரூ.50 என குறைக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 20 நாளை முதல் ஒரு கிலோ தக்காளி ரூ.40ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. நேற்று வரை, 15 லட்சம் கிலோ தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு, நாட்டின் முக்கிய நுகர்வு மையங்களில் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்