இனி இந்த பழத்திற்கு பெயர் டிராகன் பழம் அல்ல – குஜராத் அரசு!
டிராகன் பழம் என்று அழைக்கப்படக்கூடிய பழத்தின் பெயர் இனி டிராகன் பழம் அல்ல எனவும் இதற்கு கமலம் என பெயர் மாற்றம் செய்துள்ளதாகவும் குஜராத் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பார்ப்பதற்கு சப்பாத்திக்கள்ளியின் பழத்தைப் போல தோற்றமளித்தாலும் அட்டகாசமான சுவையும் உட்புறத்தில் அழகிய சதைப்பற்றான தன்மையும் கொண்ட பழம்தான் டிராகன் பழம். இந்த பழம்மெக்சிகோவை சேர்ந்ததாக கருதப்பட்டாலும் அங்கு இருந்து அமெரிக்காவுக்கு பரவி அதன் பின் தான் உலகம் முழுவதும் பரவியது எனவும் கூறப்படுகிறது. இந்த பழத்தை ஐரோப்பியர்கள் உலகம் முழுவதும் பரப்பி உள்ளனர். இந்த பழத்தின் பூக்கள் இரவு நேரத்தில் பூப்பதால் இதனை இரவு ராணி எனவும் அழைக்கின்றனர்.
இந்நிலையில் டிராகன் பழம் என அழைக்கப்படக் கூடிய இந்த பழம் தற்பொழுதும் கமலம் என குஜராத் அரசாங்கத்தால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி அவர்கள் கூறுகையில், டிராகன் பழத்தின் வெளிப்புற தோற்றம் தாமரை போல காட்சியளிப்பதாலும் சமஸ்கிருதத்தில் தாமரைக்கு கமலம் என்றுதான் பெயர் இருப்பதாலும், இந்த படத்துக்கு தற்பொழுது கமலம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதிக அளவில் தற்போது பிரபலமாகி வரக்கூடிய இந்த டிராகன் பழம் வெப்பமண்டல பழம் என்பதுடன் இது தனித்துவமான சுவையும் அட்டகாசமான உள்புற தோற்றம் கொண்டது.