அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் : ரயில் நிலையத்தின் புதிய பெயர் இதுதான்…

Ayodhya Dham Railway Junction

உத்திரபிரதேச மாநிலத்தில் அயோத்தியில் புதியதாக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் 2024 ஜனவரி 22இல் நடைபெற உள்ளது.  இதற்கான அழைப்பிதழ்கள் ஆளும்  கட்சி , எதிர்க்கட்சி என பாகுபாடு இல்லாமல் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.  விழா ஏற்பாடுகள் , தலைவர்கள் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

அயோத்தியில் அமைந்துள்ள புதிய பிரமாண்ட ராமர் கோயில் நினைவாக அயோத்தி ரயில் நிலையததின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக அயோத்தி ரயில் நிலையம் என இருந்த ரயில் நிலைய பெயரானது தற்போது அயோத்தி தாம் ரயில்நிலையம் (Ayodhya Dham junction) என மாற்றப்பட்டுள்ளது. அயோத்தி தாம் என்பதற்கு ஸ்ரீ ராமர், ஜானகியின் இருப்பிடம் என பொருள் ஆகும்.

ராமர் கோயில் அழைப்பு.. காங்கிரஸ் கட்சிக்கு வைத்த பொறி.! – கேரள முஸ்லீம் அமைப்பு.!

இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இந்த தகவலை அயோத்தி மக்களவை தொகுதி பாஜக எம்பி லல்லு சிங் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பிரதமர் நரேந்திர மோடியால் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட ரயில் நிலையம் தற்போது அடையாள மாற்றத்தை கொண்டுள்ளது.

மேலும், மக்களின் உணர்வுகளின் எதிர்பார்ப்புக்கேற்ப பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், புதிதாக கட்டப்பட்ட பிரமாண்டமான அயோத்தி ரயில் நிலையத்தின் அயோத்தி சந்திப்பின் பெயர் அயோத்தி தாம் சந்திப்பு என மாற்றப்பட்டுள்ளது.  ஜனவரி 22-ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு முன்னதாக, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ரயில் நிலையம் வரும் டிசம்பர் 30-ம் தேதி அயோத்தியில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது.

அயோத்தி தாம் ரயில் நிலையம் மூன்று கட்டங்களாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. முதல் கட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. மொத்தம் 430 கோடி ரூபாய் செலவில் இந்த நிலையம் 1,00,000 பயணிகள் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் கட்டிட வடிவமைப்பானது  இந்திய கோயில் கட்டிடக்கலையின் அழகியலுடன்ஒப்பிட்டு நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையம், வழக்கமான ரயில் நிலையங்களுக்கு முன்னோடியாக நன்கு திட்டமிடப்பட்ட தனித்துவ வசதிகளை கொண்டது. குழந்தைகளுக்கான பராமரிப்பு அறை மற்றும் ஆரம்பகால மருத்துவ சிகிச்சை வசதி போன்ற சேவைகளை கொண்டது. இது போக, இந்த ரயில் நிலையத்தில், துணிக்கடைகள், உணவகங்கள்  காத்திருப்பு அறைகள், நகரும் படிக்கட்டுகள், லிப்ட்கள் மற்றும் நவீன கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. தீ பாதுகாப்பு வசதிகள் , நடுத்தர தளத்தில் ஓய்வு அறைகள், தங்குமிடங்கள், தங்கும் அறைகள் மற்றும் நிலைய ஊழியர்களுக்கான இடங்கள் போன்ற பல்வேறு வசதிகளை இந்த அயோத்தி தாம் ரயில் நிலையம் கொண்டுள்ளது என பாஜக எம்பி லல்லு சிங் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்