எரிப்பொருளை வழங்க மறுத்ததால் உரிமையாளரின் அறைக்குள் பாம்பை வீசிய மர்மநபர்.! சிசிடிவி காட்சிகள் இதோ.!
எரிப்பொருளை வழங்க மறுத்ததால் மர்ம நபர் ஒருவர் பெண் உரிமையாளரின் அறைக்குள் பாம்பை வீசியது சிசிடிவி கேமரா காட்சியில் சிக்கியுள்ளது.
மும்பை மல்கபூர் சாலையில் உள்ள சவுத்ரி பெட்ரோல் நிலையத்தில் நபர் ஒருவருக்கு எரிப்பொருளை வழங்க மறுத்த கோவத்தில் பாம்பை அறைக்குள் விட்டு விட்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை நடந்துள்ளது.
அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி கேன் அல்லது டிரம்ஸில் எரிப்பொருளை வழங்க கூடாது என்பதால் பம்ப் ஊழியர்கள் அந்த நபருக்கு எரிப்பொருளை வழங்க மறுத்து உள்ளனர். இதனால் கோவமடைந்த அந்த நபர் பெண் உட்கார்ந்துள்ள பெட்ரோல் பம்ப் ஸ்டேஷனின் அறைக்குள் கையில் வைத்திருந்த ஜாடியிலிருந்து பாம்பு ஒன்றை எறிந்தார்.
அதனையடுத்து அந்த பாம்பு கேபினின் ஒரு பக்கத்தில் ஊர்ந்து செல்வதை அடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதனையடுத்து அந்த பாம்பை மற்றொருவால் பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது சிசிடிவி காட்சிகளை வைத்து தெரியாத அந்த மர்ம நபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய தேடி வருகின்றனர்.
कैसे-कैसे लोग होते हैं!! बुलढाणा: बोतल में पेट्रोल देने से मना किया तो नाराज युवक ने पेट्रोल पंप दफ़्तर में सांप छोड़ दिया @ndtvindia pic.twitter.com/BFWbMoxVZC
— sunilkumar singh (@sunilcredible) July 14, 2020