500 வருடங்களாக சிவன் கோவிலை பராமரித்து வரும் முஸ்லீம் பரம்பரை ..!
அசாம் மாநிலம் பிரமபுத்திரா நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு சிவன்கோவிலை ஒரு முஸ்லிம் குடும்பம் பரம்பரை பரம்பரையாக கடந்த 500 ஆண்டுகளாக பராமரித்து வருகின்றனர்.
தற்போது அந்த சிவன் கோவிலை மோதிபர் ரகுமான் என்ற முதியவர் பராமரித்து வருகிறார். இதை பற்றி அவர் கூறுகையில் , சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது. சுத்தம் செய்வது போன்ற பணிகளை தினமும் செய்து வருகிறேன். சிவனை அன்புடன் “நானா” என அழைக்கிறேன்.
என்னுடைய முன்னோர்களின் கனவில் சிவன் தோன்றி இப்பணியை செய்யுமாறு கேட்டுக் கொண்டதன் படி நாங்கள் பரம்பரை பரம்பரையாக இந்த பணியை செய்து வருகிறோம். இந்த பணியை கடந்த 500 வருடங்களாக செய்துவருகிறோம்.
நானா தூய்மையை விரும்புவோர் என்பதால் கோவில் எப்போதும் தூய்மையாக வைத்து கொள்வேன்.மேலும் என் காலத்தில் பிறகு எனது மகன்கள் இந்த பணி மேற்கொள்ளவர்கள் என கூறினார்.